திட்டப்பணி 1 (Project-1 — 30 மதிப்பெண்கள்)
தலைப்பு
நீ சமீபத்தில் சென்ற மறக்க முடியாத நிகழ்ச்சி
அல்லது (OR)
உனக்குப் பிடித்த பொழுதுபோக்கு நடவடிக்கை (Hobby)
சமர்ப்பிக்கும் கடைசி நாள் வாரம் 4
என்ன நிகழ்ச்சி / பொழுதுபோக்கு நடவடிக்கை என்று முடிவு செய்து, குறிப்பு எழுதி வைக்கவும்.
திட்டப்பணி மதிப்பீட்டு முறை (Marks will be given based on the following)
ஒரு அட்டைத் தாளில் (chart paper) அடித்தல், திருத்தல் இல்லாமல், தாள் கசங்காமல், தமிழில் பெயர் மற்றும் வகுப்பு எழுதுதல் — 4 மதிப்பெண்கள்
உரிய தலைப்பு — 3 மதிப்பெண்கள்
புகைப்படங்கள் / வரைபடங்கள் மற்றும் அவற்றுக்கு ஏற்ற தலைப்புகளைத் தமிழில் எழுதுதல் — 8 மதிப்பெண்கள்
மாணவர்கள் வகுப்பில் அவர்களின் திட்டப்பணியைப் பற்றி 6 வாக்கியங்களுக்கு குறையாமல் தமிழில் பேச வேண்டும்.
வகுப்பில் பேச்சுத் தமிழ் அல்லது எழுத்து தமிழில் வாய்மொழி விளக்கம் (தடங்கல் இல்லாத பேச்சுச் சரளம், சரியான உச்சரிப்பு). திட்டப்பணியைப் பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்குத் தமிழில் பதில் சொல்லுதல் — 15 மதிப்பெண்கள்
சமர்ப்பிக்கும் கடைசி நாள் — வாரம் 4
மாணவர்கள் வகுப்பிற்கு வந்தும், ஒரு வாரத்திற்கு மேல் காலதாமதமாக சமர்ப்பிக்கப்படும் திட்டப்பணி 75% மதிப்பெண்களுக்கே மதிப்பீடு செய்யப்படும்.
இரண்டு வாரத்திற்கு மேல் காலதாமதமாக சமர்ப்பிக்கப்படும் திட்டப்பணிக்கு மதிப்பெண்கள் வழங்கப்படமாட்டாது