வீட்டுப்பாடம் - Week 6:
➢ கீழே குறிப்பிட்டுள்ள பயிற்சியைச் செய்யவும்:
✓ 5.6 கட்டங்களை நிரப்பு:
✓ 5.8 சொல் உருவாக்கு:
✓ 5.9 சரியாக இணை:
✓ 5.10 படத்தைப் பார். பின் சரியான சொல்லை வட்டமிடு:
➢ விடுபட்ட உகர உயிர்மெய் எழுத்துகளை எழுது:
கு, ஙு, _______, ஞு, _______, ணு, து, _______, _______, மு, _______, ரு, _______, வு, _______, ளு, _______, னு.
➢ சொல்வதெழுதுதல்:
✓ ஒவ்வொரு வார்த்தையையும் ஆங்கிலப் பொருளுடன் 2 முறை எழுதவும். (வார்த்தைகளுக்கு மாணவர்கள் படம் வரையலாம்)
இஞ்சி – ginger
இறகு – feather
இனிப்பு – sweet
➢ கையெழுத்துப் புத்தகம்: பக்கம் 5
➢ வாசித்தல் பயிற்சி – 15 நிமிடங்கள் (Reading practice – 15 minutes):
பாடநூலிலிருந்து வாசிப்போம் (5.2), சொல்லிப் பழகுவோம் (5.3) மற்றும் தெரிந்து கொள்வோம் (5.4) பாடங்களை வாசிக்கவும்.
மேலும், மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான தமிழ் கதை / பாடல் / கட்டுரை / செய்திகளை வாசிக்கலாம்.
சரியான உச்சரிப்போடு பொருளறிந்து வாசிக்க பெற்றோர் உதவலாம்.
மாணவர்கள் தாங்கள் வாசிப்பதைப் பதிவு (Read log ) செய்யவும்.
➢ உரையாடல் பயிற்சி – 2-3 நிமிடங்கள் (Conversation):
ஆசிரியர் உரையாடல் தலைப்பைக் கொடுக்கலாம் அல்லது மாணவர் உரையாடல் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம் (choose).
மாணவர்கள் தலைப்பிற்கேற்ப பெற்றோர், உறவினர் அல்லது நண்பர்களுடன் பேச்சுத் தமிழில் கலந்துரையாடி, அதை ஒலிப்பதிவு (audio) செய்து ஆசிரியருக்கு அனுப்பவும். மாணவர்கள் தனியாகவும் பேசலாம்.
ஒருமுறை பயன்படுத்திய தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
எழுத்துத் தமிழில் பேசுவதைக் கூடியவரை தவிர்க்கவும்.
ஓரிரு சொற்கள் ஆங்கிலத்தில் பேசுவது தவறில்லை.
கலந்துரையாடலின் போது மாணவர் அதிகம் பேச வேண்டும். மாணவர் அதிகம் பேசாமல் பெற்றோர் அதிகம் பேசியிருந்தாலோ அல்லது மாணவர் ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளில் பேசியிருந்தாலோ மதிப்பெண்கள் குறைக்கப்படும்.